Connect with us

இந்தியா

Paytm ஐப் பயன்படுத்திய ஜெர்மனி அமைச்சர்: Paytm சி.இ.ஓ பெருமிதம்!

Published

on

இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெர்மனி அமைச்சர் டெல்லியில் சில பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு Paytm செயலியை பயன்படுத்தி பணம் செலுத்தி உள்ளதை அடுத்து பெருமையுடன் பேடிஎம் சிஇஓ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அதில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பல வெளிநாட்டு பிரபலங்கள் இந்தியா வந்துள்ளனர். அந்த வகையில் ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்அவர்களும் டெல்லி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் அன்னலெனா பேர்பாக் அவர்கள் டெல்லியில் உள்ள மார்க்கெட்டில் சில பொருட்களை வாங்கினார். இந்திய பாரம்பரிய உடைகள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கிய அவர் அந்த பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்காக Paytm டிஜிட்டல் செயலியை பயன்படுத்தினார்.

Paytm செயலியை பயன்படுத்திய அனுபவம் குறித்து அவர் கூறியபோது ஷாப்பிங் செய்து Paytm ஐ பயன்படுத்துவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்றும் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ விஜய் சேகர் சர்மா அவர்கள், ‘இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பேமெண்ட் Paytm என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவர் இந்தியாவுக்கு ஜி20 பிரதிநிதிகளாக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள் வரவேற்கிறோம் என்றும் இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பேமென்ட் உள்கட்டமைப்பை Paytm அனுபவத்தை அனுபவங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அனைத்து விதமான டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறத் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?