Connect with us

இந்தியா

ஒரே நாளில் ரூ.7000 கோடி நஷ்டம்… உலக பணக்காரர் பட்டியலில் அதானிக்கு பின்னடைவு!

Published

on

By

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்த காரணத்தினால் ஒரே நாளில் 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உலக பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அதானி நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 872 மில்லியன் டாலர் சரிந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் அவரது நிறுவனங்களின் பங்குகள் சுமார் 7,118 கோடி ரூபாய் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்னவே இந்த ஆண்டு அவருடைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டு மட்டும் சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக அதான் என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 13 சதவீதம் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதானியை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெஃப் பெசோஸ் இப்போது உலகின் மூன்றாவது பணக்காரராக உள்ளார், முதல் இரண்டு பணக்காரர்கள் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோர் உள்ளனர்.

அதானி குழுமத்தின் தலைவராக இருக்கும் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு தற்போது 119 பில்லியன் டாலர்களாக உள்ளது. கௌதம் அதானியின் நிகர மதிப்பு நேற்று 24 மணி நேரத்தில் 872 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு முதல் விமான நிலைய மேலாண்மை வரையிலும், FMCG முதல் சிமென்ட் வரையிலும் பரந்து விரிந்திருக்கும் அதானியின் வணிகம் வலுவான போட்டியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்த நிலையில் தற்போது சொத்து மதிப்பு ஏறியது போலவே இறங்கியும் வருகிறது.

ஆரோக்கியம்5 hours ago

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 5 முக்கிய உணவுகள்

தமிழ்நாடு5 hours ago

சென்னையில் மின் உற்பத்திக்கான கார்பன் படிமத்தைக் குறைக்க டான்ஜெட்கோ முடிவு!

வணிகம்6 hours ago

திவால் நிலையில் வோடாபோன் ஐடியா.. 33% பங்குகளை வாங்கும் மத்திய அரசு..!

தமிழ்நாடு6 hours ago

பிரபல பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு.. புதிய பாலம் எப்போது திறக்கப்படும்?

வேலைவாய்ப்பு6 hours ago

ரூ.39100/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 hours ago

தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு7 hours ago

பாட்ஜெட் 2023-2024ல் தெற்கு ரயில்வேக்கு கிடைத்து எவ்வளவு? எந்தெந்த திட்டங்கள்.. வழித்தடங்கள்!

வேலைவாய்ப்பு7 hours ago

ரூ.48,000/- ஊதியத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு7 hours ago

சென்னை மாநகர பேருந்துகளில் வருமானத்தை அதிகரிக்க அசத்தலான முடிவு!

இந்தியா7 hours ago

நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

வணிகம்5 days ago

தங்கம் விலை அதிரடியாக ஒரேநாளில் இவ்வளவு சரிவா(31/01/2023)!

சென்னையில் மெட்ரோ லைட் மெட்ரோ ரயில் தெரியும் அது என்ன மெட்ரோ லைட் Soon Chennai May Get Tram Like MetroLite Train Service
தமிழ்நாடு5 days ago

சென்னையில் மெட்ரோ லைட்.. மெட்ரோ ரயில் தெரியும்.. அது என்ன மெட்ரோ லைட்?

இந்தியா6 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

உலகம்5 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 days ago

கல்லீரல் நோய்கள் குணமாக நிலவேம்பு!

சென்னை அவுட்டர் ரிங் ரோடு
தமிழ்நாடு6 days ago

சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணமா?

சினிமா6 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு7 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?