தமிழ்நாடு
ஒரே மாதத்தில் 2வது முறை உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் 1015 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை ஆகியது. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் என்று சமையல் எரிவாயு சிலிண்டர் மூன்று ரூபாய் அதிகரித்துள்ளதை அடுத்து 1018 ரூபாய் 50 காசு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகி வருகிறது. மே மாதத்தில் மட்டும் இரண்டு முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2507 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது