Connect with us

உலகம்

4வது முறையாக பெய்யும் மீன் மழை..உயிருடன் மீன்கள் துள்ளிய ஆச்சரியம்..!

Published

on

ஒருமுறை இரண்டு முறை அல்ல ஆஸ்திரேலியாவில் நான்கு முறை மீன் மழை பொழிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பது வழக்கமான நிகழும் நிகழ்வு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மீன்மழை பொழிவது என்பது மிகவும் அரிதான ஒரு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் இருந்து அல்லது ஆற்றில் இருந்து திடீரென மேகங்கள் தண்ணீரை உள்ளிழுக்கும் போது மீன்களும் சேர்த்து இழுக்கப்படும் என்றும் அவை மேகங்கள் ஆகி குளிர்ந்து மழையாக பொழியும்போது மீன்களும் மழையுடன் சேர்த்து வானத்திலிருந்து கீழே விழும் என்பது தான் மீன் மழை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக அரிதாகவே இந்த மீன் மழை பொழிந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் நான்கு முறை மீன் மழை பொழிந்துள்ளது அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கேத்தரின் என்ற பகுதியில் பாலைவனத்தின் விளிம்பில் திடீரென மீன் மழை பொழிந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த 1974, 2004 2010 ஆகிய ஆனூகளில் ன் மழை பொழிந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் மீன்மழை பொழிந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்மழையில் விழுந்த மீன்கள் அனைத்துமே உயிருடன் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் மீன்களை வளர்ப்பதற்காக அந்த மீன்களை சேகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடுமையான மழைக்கு மத்தியில் வானத்திலிருந்து மீன்கள் சாரை சாரையாக விழும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

வானத்திலிருந்து விழுந்த மீன்கள் பெரும்பாலும் இறக்கவில்லை என்றும் உயிருடன் இருப்பதாகவும் இது மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது. இது இறைவனின் ஆசிர்வாதம் என்று நான் நம்புகிறேன் என்றும் கடந்த காலங்களில் மீன் மழை பொழிவதைப் போன்று தற்போது மீன் மழை பொழிந்துள்ளது என்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் காலையில் தூங்கி எழுந்த போது திடீரென மீன் மழை பொழிந்தது என்றும் தெரு முழுவதும் மீன்களால் மூடப்பட்டிருந்தது என்றும் ஒருவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

வானிலை நிபுணர்கள் இது குறித்து மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக மீன் மழை பெய்வது எப்படி என்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

 

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?