வணிகம்
கோயம்புத்தூரில் உணவு டெலிவரி சேவை தொடங்கி ஃபுட்பாண்டா அதிரடி!

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது.
ஃபுட்பாண்டாவின் உணவு டெலிவரி சேவை இன்று (27/09/2018) முதல் கோயம்புத்தூர், மைசூர், ஜெய்ப்பூர், சண்டிகர், கான்பூர், லக்னோ, இந்தூர், அகமதாபாத், நாசிக், நாக்பூர், புவனேஷ்வர், கவுகாத்தி மற்றும் விஷாகபட்டினத்தில் தொடங்கியுள்ளது.
எனவே இந்த நகரங்களில் உள்ள ஓட்டல் நிறுவனங்கள் எல்லாம் ஃபுட்பாண்டாவுடன் இணைந்து மேலும் தங்களது விற்பனையினை அதிகரிக்க முடியும்.

உபர் ஈட்ஸ் போட்டியாக ஃபுட்பாண்டா நிறுவனத்தினை ஓலா நிறுவனம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
















