இந்தியா
டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்!

காலை டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி வரை தனக்கு காலை உணவு தரவில்லை என மருமகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் மாமனார்.
இதனை அடுத்து அவர் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மருமகள் இருக்கும் இடம் சென்று இருந்து திடீரென துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டு மருமகளின் வயிற்றுப்பகுதியில் பட்டதால் படுகாயம் அடைந்த மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் அவர் தொடர்ந்து இன்னும் சில நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இதுகுறித்து மருமகள் அளித்த புகாரின் பேரில் மாமனார் காசிநாத் என்பவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த மாமனாரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
























