இந்தியா
டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் சங்கம்!

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லி புறநகர்ப் பகுதியில் போராட்டம் நடித்து வரும் விவசாயிகள் சங்கங்கள், டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
டெல்லியில் செல்லும் அனைத்து சாலைகளையும் அடைக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ந்து 9வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் செய்த பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த நாடு தளியை பந்த்துக்கு விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக அமைச்சர் சோம் பிரகாஷ் மற்றும் பலர் ஈடுபட்டனர்.
மத்திய அரசுடனான விவசாயிகளின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஒருவேலை இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்கங்கள் சமாதானம் ஆனால் பந்த் ரத்தாக வாய்ப்புள்ளது.
ஆனால் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் விடாப்பிடியாக உள்ளதால், நாடு தழுவிய பந்த் நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது.













