சினிமா செய்திகள்
பவன்கல்யாண் படம் ரிலீஸான தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவான வக்கீல் சாப்’ என்ற திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பவன் கல்யாண் ரசிகர்கள் இன்று முதல் நாள் முதல் காட்சியை காண தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் திரையரங்குகளில் குவிந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அந்த திரையரங்கை அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் புகார் அளிக்க காவல்துறை வருவதற்குள்ளாகவே திரையரங்கு பெரும் சேதம் அடைந்தது. பட்டாசுகளை கொளுத்தி போட்டு, கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, கதவுகளை அடித்து நொறுக்கி தியேட்டரையே சின்னாபின்னம் ஆகி விட்டனர் ரசிகர்கள். திரையரங்கு முறையாக பராமரிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

















