Connect with us

தமிழ்நாடு

வேளச்சேரி ‘இவிஎம் பறிமுதல்’; சத்யபிரதா சாகு கொடுத்த ‘அடடே’ விளக்கம்- விளாசிய திருமா!!!

Published

on

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் மே 2 ஆம் தேதி நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இப்படியான சூழலில், சென்னை, வேளச்சேரி தொகுதியில் ஒரு நபர் பைக்கில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிமுக – பாஜகவினரே இதற்கு காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கோடை வெயில்,  கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75%  வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த எந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

சினிமா10 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா10 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா1 day ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

%d bloggers like this: