Connect with us

வணிகம்

EPFO அறிமுகப்படுத்திய புதிய ‘பாஸ்புக் லைட்’: PF டிரான்ஸ்ஃபர்களை ஆன்லைனில் எளிதாக கண்காணிக்கலாம்!

Published

on

EPFO புதிய ‘Passbook Lite’ அம்சம்: PF டிரான்ஸ்ஃபர் விண்ணப்பங்களை ஆன்லைனில் எளிதாக கண்காணிக்கலாம்

ஊழியர்கள் நலனுக்காக புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO), அதன் மெம்பர் போர்ட்டலில் ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி மூலம், மெம்பர்கள் தங்களுடைய PF பாஸ்புக்கை எளிமையான வடிவில் பார்க்க முடியும். பங்களிப்பு தொகைகள், வித்ட்ராயல்கள் மற்றும் பேலன்ஸ் போன்ற முக்கிய தகவல்களை விரைவாக தெரிந்து கொள்ளலாம்.

முன்னர், பாஸ்புக் பார்க்க EPFO பாஸ்புக் போர்ட்டலுக்கே லாகின் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது ஒரே ஒரு லாகின் மூலமாக பல்வேறு முக்கிய சேவைகள், பாஸ்புக் பயன்பாடு உட்பட, கிடைக்கிறது.

PF டிரான்ஸ்ஃபர் எளிமையாக்கம்

ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் ஊழியர்கள் ஆன்லைனில் Form 13 மூலம் PF அக்கவுண்டை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இனி, Annexure K-ஐ நேரடியாக PDF வடிவில் போர்ட்டலில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

இதன் மூலம்:

  • டிரான்ஸ்ஃபர் விண்ணப்பங்களை ஆன்லைனில் டிராக் செய்யலாம்.

  • புதிய PF அக்கவுண்டில் பேலன்ஸ் மற்றும் பணிக்காலம் சரியாக அப்டேட் ஆகியுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.

  • Annexure K மற்றும் தொடர்புடைய தகவல்களை நிரந்தரமாக டிஜிட்டல் பதிவாக வைத்துக்கொள்ளலாம்.

முன்னதாக, PF டிரான்ஸ்ஃபர், செட்டில்மெண்ட், அட்வான்ஸ், ரீஃபண்ட் போன்ற செயல்பாடுகளுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் அனுமதி அவசியமாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டது. புதிய ‘Passbook Lite’ மூலம் இந்த சிக்கல்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், கிளைம் செட்டில்மெண்டுகள், PF டிரான்ஸ்ஃபர்கள், அட்வான்ஸ், ரீஃபண்டுகள், செக்குகள், ECS, NEFT ரிட்டன்கள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்படும். எளிமைப்படுத்தப்பட்ட அங்கீகரிப்பு முறையால் உறுப்பினர்கள் சிறந்த சேவையை அனுபவிக்கலாம் என EPFO தெரிவித்துள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on fine and applied arts. local jobs. Advt no apprenticeship.