வணிகம்
EPF கணக்கில் பணம் தவறவிடும் அபாயம்: தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
உங்கள் EPF கணக்கில் பணம் இல்லையா? தவறவிட்டால் தீர்க்க முடியாத நஷ்டம் ஏற்படலாம்!
பல்வேறு பணியாளர்கள் அவர்களுடைய EPF (Employees’ Provident Fund) கணக்கை ஆண்டுதோறும் சரிபார்க்காமல் இருப்பது சாதாரணம். ஆனால், அந்த கணக்கில் பணம் சரியாக வருகிறதா என்பதை கண்டுபிடிக்காமல் இருந்தால், ஓய்விற்கு பின் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் வங்கிக் கணக்கை மாதந்தோறும் பார்ப்பீர்கள். அதுபோல், EPF கணக்கை ஏன் தவிர்க்கிறீர்கள்? இது உங்கள் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பின் அடிப்படை. ஆனால், ஒரு நாள் கணக்கை திறந்து பார்த்தால் பணம் குறைந்திருப்பதை கண்டால் அதிர்ச்சி ஏற்படும்.
ஏன் இப்படி நடக்கிறது?
சில நிறுவனங்கள் சம்பளத்திலிருந்து EPF தொகையை பிடித்துக்கொண்டு அதை EPFO-க்கு டெபாசிட் செய்யாமல் இருக்கலாம்.
ஒரு சாதாரண KYC தவறு, பங்களிப்பை கணக்கில் பதிவு செய்யாமல் தடுக்கலாம்.
தகவல் தவறுகள், தாமதங்கள், டெஜிட்டல் கோளாறுகள் ஆகியவை EPF திட்டத்தின் நன்மைகளை பாதிக்கக்கூடும்.
இதனால் என்ன பிரச்சனை?
உங்கள் சேமிப்பு குறைகிறது.
வட்டி விகிதம் குறைய வாய்ப்பு.
ஓய்வு பெற்றபின் எதிர்பார்த்த தொகையை பெற முடியாமல் போகும்.
டெபாசிட் பிழை உங்கள் வட்டித் தொகையையும் பாதிக்கிறது.
KYC தவறுகள் மற்றும் தகவல் முரண்பாடுகள் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற கடினமாக்கும்.
🛡 என்ன செய்ய வேண்டும்?
மாதம் ஒருமுறை EPF பேலன்ஸை சரிபார்க்கவும்
UMANG App
SMS / Missed Call சேவைகள்
KYC விவரங்களை புதுப்பிக்கவும்
EPFO Member Portal-ல் PAN, Aadhaar, Bank details போன்றவற்றை சரி பாருங்கள்.
பிரச்சனை இருந்தால்
உங்களது HR அல்லது Accounts டீமிடம் தொடர்புகொள்ளுங்கள்.
தீர்வாக இல்லையெனில், EPFO Grievance Portal-ல் புகார் அளிக்கலாம்.
🔄 புதிய மாற்றங்கள் மற்றும் எளிய முயற்சிகள்
EPFO தற்போது தனது சேவைகளை டிஜிட்டல் அடிப்படையில் மேம்படுத்தி வருகிறது:
EPF 3.0 வந்ததும் ATM மாதிரி வித்ராவல்,
Auto Settlement வசதி
சுயமாக விவரங்களை திருத்தும் அம்சம் போன்றவை அறிமுகமாகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
