தமிழ்நாடு
என்னை முதல்வர் வேட்பாளர் ஆக்கியது யார் தெரியுமா? போட்டு உடைத்த எடப்பாடி பழனிசாமி

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதன் இறுதியில் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் துணை முதல்வராக மாறினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக மாறினார். இதனால் இம்முறை சட்டமன்ற பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறினர். இதனால் முதல்வர் வேட்பாளரை நிறுத்தவதில் சர்ச்சை எழுந்தது. இறுதியில் பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக தொடருவார் என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தன்னை முதல்வர் வேட்பாளாக அறிவித்தது பன்னீர்செல்வம் தான் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது நெறியாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் பிளவு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததே பன்னீர்செல்வம் தான் என்றும் கூறினார். இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் ஒளிப்பரப்பாகும் போது தெரிய வரும். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை செய்தி நிறுவனங்கள் பிரத்யேக பேட்டி எடுத்து வருகின்றனர்.