தமிழ்நாடு
பொங்கல் பரிசு ரூ.2,500 வாங்கவில்லையா? இதை முதல்ல படிங்க!

தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகை 2,500 ரூபாய் பெறுவதற்கு இன்றே (ஜன.25) கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணமும், கரும்பு, வெல்லம், பச்சரிசி, திராட்சை, ஏலம், முந்திரி திராட்சை உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இது இம்மாதம் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் வாங்கப்பட்டது. பெரும்பாலோனோர் இதனை வாங்கி விட்டனர்.
இருப்பினும் சுமார் 3 லட்சம் பேர் பொங்கல் பரிசுத்தொகையைப் பெற முடியாமல் இருந்ததது. அவர்களுக்காக ஜனவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்கு தமிழக அரசு வழங்கியுள்ள கூடுதல் கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. எனவே பரிசுத்தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.