வணிகம்
“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”
Published
4 மாதங்கள் agoon
By
Poovizhi
மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய ஒரு புத்தம் புதிய தொழில் வாய்ப்பு தற்போது அதிகம் பேசப்படுகிறது. அதுவும் மிகவும் குறைந்த முதலீட்டில், தினமும் சில மணி நேரம் மட்டுமே செலவிட்டு செய்யக்கூடியது. இந்த தொழில் என்ன தெரியுமா? லாபம் அதிகம் தரக்கூடிய ‘சூப் பிசினஸ்’ தான் அது!
ஒரு தொழிலை தொடங்குவதற்கு திட்டமிடல், சரியான இடத் தேர்வு மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை புரிதல் மிக முக்கியம். சூப் தொழில் இந்த மூன்றையும் பூர்த்தி செய்கிறதால், சிறிய முதலீட்டில் பெரிய வருமானத்தைப் பெற முடியும்.
சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வீட்டு சுவையுடன் கூடிய சூப், குறிப்பாக மழைக்காலங்களில், வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. வீட்டில் தயாரித்து, முழுமையாக pack செய்து, நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்தாலும் கூட இந்த தொழில் வேகமாக வளர முடியும்.
⭐ இந்த சூப் பிசினஸின் முக்கிய செயல்முறை:
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட், மருத்துவமனை, ஜிம், பிஸியான தெருக்கள் போன்ற இடங்களுக்கு அருகில் ஒரு சிறிய கிச்சன் போதுமானது.
ஆரம்பத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.
ஒரு சூப் தயாரிக்க ரூ.10–15 செலவாகும்; ரூ.35–40 வரை விற்கலாம்.
தினமும் காலை 2–3 மணி நேரம், மாலை 2–3 மணி நேரம் மட்டும் ஒதுக்கினாலே போதும்.
⭐ மாத வருமான கணக்கு:
ஒரு மாதத்தில் 2,000 கிண்ணம் சூப் விற்றால்
சுலபமாக ₹90,000 முதல் ₹1,00,000 வரை வருமானம் பெற முடியும்.
குறைந்த முதலீடு, குறைந்த நேர ஒதுக்கீடு மற்றும் அதிக லாபம் தரக்கூடிய சிறந்த தொழில் இது. வருமானம் அதிகரிக்கும்போது, இந்த சூப் பிசினஸை ரொட்ஸ் கடை, கேஃபே அல்லது பிராஞ்சைஸ் மாடலாகவும் விரிவுபடுத்தலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.









