Connect with us

சினிமா

வாரிசு படத்துல ஏகப்பட்ட சர்ப்ரைஸ் இருக்கு! வினோத்துக்கு போட்டியா பேட்டி கொடுத்த வம்சி!

Published

on

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றே போதும் படத்துக்கான ப்ரமோஷனுக்கு என நடிகர் விஜய் சும்மா இருந்து விட்டார். ஆனால், அஜித் ப்ரமோஷனுக்கு வரவில்லை என்றால் கூட பரவாயில்லை ஹீரோயின் மஞ்சு வாரியர் உடன் நாம பேட்டிக் கொடுத்து படத்தை பிரபலப்படுத்துவோம் என இயக்குநர் எச். வினோத் செய்த தரமான சம்பவம் கடைசியாக இயக்குநர் வம்சி பைடிபள்ளியையும் மீடியா முன் கொண்டு நிறுத்தி உள்ளது.

வாரிசு படம் தமிழில் நாளை அதிகாலை வெளியாகிறது. ஆனால், தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷன் ஜனவரி 13ம் தேதி தான் வெளியாகின்றன. வாரிசு படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

படத்துக்கு முதல் நாளே நெகட்டிவ் ரிப்போர்ட் வெளியாகி விட்டால் அதற்கு பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடுவதும் ஒன்று தான் வெளியிடாமல் இருப்பதும் ஒன்று தான். துணிவு படத்துக்காக இயக்குநர் எச். வினோத் டிவிக்களிலும் யூடியூப் சேனல்களிலும் 360 டிகிரி ப்ரமோஷன் செய்து அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

துணிவு படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்களும் கன்ஃபார்மாக நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில், வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி அளித்த பேட்டியில் வாரிசு படத்தின் ட்ரெய்லரில் காட்டியது மட்டுமே படம் கிடையாது என்றும் 2.40 மணி நேர படத்தை 2 நிமிட ட்ரெய்லரில் எப்படி காட்ட முடியும் என்று கூறிய அவர் வாரிசு படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் இருக்கு என்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

நாளை வெளியாக உள்ள இரு படங்களில் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எந்த படம் வெல்லும் என்கிற போட்டி நிலவி வரும் நிலையில், வாரிசு vs துணிவு போட்டியில்லை என்றும் வாரிசு and துணிவு பொங்கல் என வம்சி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?