சினிமா செய்திகள்
வில்லன் ஆக அறிமுகம் ஆகிறார் கெளதம் மேனன்… எந்தப் படத்துல யாருக்கு எதிரா தெரியுமா?

இயக்குநர் கெளதம் மேனன் முதன்முறையாக வில்லன் கெளதம் மேனன் ஆக நடிக்க படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.
இயக்குநர் கெளதம் மேனன் சில காலமாக நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கெளரவ தோற்றங்களில் எல்லாம் ஒரு படத்தின் கதை போகும் போக்கையே மாற்றும் கதாபாத்திரங்களை எல்லாம் எடுத்து நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்னும் படத்தில் ஒரு நடிகராக ரசிகர்களைக் கவர்ந்தவர் சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி திரைப்படத்தில் இன்னும் அதிகமாக ஸ்கோர் செய்துவிட்டார்.
தற்போது கெளதம் மேனன் வில்லன் ஆக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ருத்ர தாண்டவம் என்னும் படத்தில் கெளதம் மேனன் வில்லன் ஆக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகன் ஆக நடிகர் ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார். இவர் ‘தல’ அஜித் மச்சான், அதாவது அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர். இந்தப் படத்தில் கதாநாயகி ஆக ‘குக்கு வித் கோமாளி சீசன் 2’ புகழ் தர்ஷா குப்தா நடிக்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனன் சார் வாதாபிராஜனாக #ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் ????????#RudraThandavam pic.twitter.com/sGvSv2pJav
— Mohan G Kshatriyan ???? (@mohandreamer) February 14, 2021