சினிமா செய்திகள்
‘ஒரே நேரத்துல ரெண்டு லவ் பெயிலியர் சார்…’- காத்து வாக்குல ரெண்டு காதல் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகி யூட்யூப் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடிகை சமந்தாவும் நடித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்துக்கு பட அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாம்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். அனிருத் இசையில் முதல் பாடல் வீடியோ தற்போது யூட்யூப் தளத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ரஜினியின் அண்ணாத்த, இரண்டு மலையாள திரைப்படங்களிலும் நயன் நடித்து வருகிறார்.