சினிமா செய்திகள்
‘கர்ணன்’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்: ஆனால் ஏப்ரல் 9ல் ரிலீஸா?

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் ’யுஏ’ சான்றிதழ் பெற்று இருப்பதாக தயாரிப்பாளர் தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பொதுவாக ஒரு படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் இன்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவு செய்த ட்வீட்டில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வரும் நிலையில் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை கணக்கில் கொண்டு அதன் பின்னர் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த தேதியில் மாற்றம் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
தனுஷ், ரஜிஷா விஜயன், லால், உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கி உள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Karnan U/A ???? https://t.co/i2H8TYJARM
— Kalaippuli S Thanu (@theVcreations) April 2, 2021




















