Connect with us

தமிழ்நாடு

துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.5,000 கோடி ஒதுக்கீடு!

* 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!

* கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு

* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை

மேலும் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும்,
தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும் நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடம் என்றும், கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும், கொரோனா தாக்கம் வரவு, செலவு திட்டத்தில் எதிரொலித்துள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தெரிவித்துள்ளன.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?