இந்தியா
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். – தமிழ்நாடு அணைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
2019ல் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்ப செய்யப்படும் என பல்வேறு மத்திய அசை்சர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே இந்த நடவடிக்கை முந்தைய அரசுகளால் கொண்ட வரப்பட்ட போது இரண்டு முறை 25 மற்றும் 25 ஆண்டுகள் என ஒத்தி வைக்கப்பட்டது. ஆனல் தற்போதுள்ள பாஜக அரசு இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியதால் இது குறித்து அச்சமும் எதிர்ப்பும் தென்னிந்திய மாநிலங்களிடையே பரவலாக எழத் தொடங்கியது.
தற்போது நாடளுமன்றத்தில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 4 நியமன உறுப்பினர்களும் உள்ளனர். தமிழ்நாட்டில் 39 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய ஒன்றிய அரசின் திட்டப்படி 8 இடங்கள் குறைக்கப்பட்டு 31 என ஆகிவிடும் என்ற அச்சம் தீவிரமாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்டையிலேயே இத்தொகுதி மறு வரையறை செய்யப்படும் என அறிவித்திருப்பதே இந்த அச்சத்திற்குக் காரணம். ஒன்றிய அரசின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் தென் மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டு நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றன. இவ்வாறிருக்க ஒன்றிய அரசின் இந்த திட்டத்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்பட்டு நியாயமான கோரிக்கைகளுக்கு கூட மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதே அணைவரின் ஆதங்கமாக உள்ளது.
2026ல் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தள்ளது. எனவே தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று அவர் கூட்டியுள்ள அணைத்துக் கட்சிக் கூட்டத்தில் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்று தங்களது ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இக்கூட்டத்தில் அதிமுக தவெக விசிக பாமக காங்கிரஸ் உள்ளிட்ட அணைத்துக் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். பாஜக நாதக மற்றும் தமாக ஆகிய கட்சிகள் மட்டுமே பங்கேற்கவில்லை. ஒருவேளை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தற்போதள்ள விகிதாச்சாரப்படியே உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தண்டனை வழங்குவது போல் உள்ளதாக பங்கேற்ற அணைவரும் தெரிவித்தனர். தொகுதி மறு சீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு அணைத்துக் கட்சியனரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு இப்பிரச்னை நல்ல முறையில் பரிசீலிக்கப்பட்டு அணைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வு எட்டப்பட வேண்டும் என ஒன்றிய அரசிற்கு அணைத்துக் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
ஒன்றிய அரசு தனது இந்த முயற்சியை 2026 லிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க Nவண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு எட்டப்ட்டது.