Connect with us

வணிகம்

EPS ஓய்வூதியம் உயர்வு? ஓய்வுபெற்றோருக்கு பெரிய நம்பிக்கை!

Published

on

தனியார் துறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,500 ஆகவும் உள்ளது. ஓய்வூதியத் தொகையை ரூ.1,000 லிருந்து ரூ.3,000 அல்லது அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில், தீபாவளி பரிசாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், 23 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க இது பெரும் நிவாரணமாக இருக்கும்.

மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையில் EPFO மத்திய அறங்காவலர் குழு (CBT) அக்டோபர் 10–11 ஆம் தேதி பெங்களூருவில் கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத்தை ரூ.7,000 வரை உயர்த்த கோரியிருந்தாலும், அது சாத்தியமற்றதாகவே கருதப்படுகிறது. இருப்பினும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.2,500 ஆக உயர்த்தும் வாய்ப்பு மிகுந்துள்ளது.

EPS-95 திட்டம் என்பது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இதில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 8.33% பங்களிப்பு நிறுவனத்திலிருந்தும், 1.16% அரசாங்க ஆதரவிலிருந்தும் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உயர்வு நடைமுறைக்கு வந்தால், ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய வருமானம் 2.5 மடங்கு அதிகரிக்கும். இது அதிகம் சம்பாதிப்போரை பாதிக்காது என்றாலும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் இருக்கும் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், CBT கூட்டத்திற்குப் பிறகு EPS ஓய்வூதியம் உயர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும் என ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 மணி நேரங்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

செய்திகள்9 மணி நேரங்கள் ago

2026 இறுதிக்குள் டோல் பிளாசாக்கள் அகற்றம்.. நிற்காமல் 80 கிமீ வேகத்தில் செல்லலாம் – நிதின் கட்கரி அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. விஜய்க்கு வெளியிலிருந்து ஆதரவு தர தயாராகிறதா திமுக?

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணி கட்சிகளிடம் மட்டுமே ஆதரவு கேட்டு வருகிறோம்.. பாஜக கூட்டணியிடம் இல்லை – தவெக விளக்கம்

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய திமுக.. ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2026, வெள்ளிக்கிழமை

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா22 மணி நேரங்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

செய்திகள்5 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

வணிகம்5 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

Translate »
For inspirasjon, besøk reddit tråden om spanske cv er. Behind the scene of purely blue music video premiere pro fx. -.