இந்தியா
இந்தியா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியா- உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
உயிர்க்கொல்லி கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மும்பை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர் உயிரிழந்தார்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.
அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அதேபோல் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,568 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா அதிதீவிரமாகப் பரவி வரும் இந்தவேளையில் அரசு சொல்வதைக் கேட்டுத் தனித்திருப்போம், சுகாதாரம் பேணுவோம் என்று உறுதி மொழி ஏற்போம்.

















