Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன் (29/04/2019)!

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்

இன்று அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்

இன்று முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

சிம்மம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

கன்னி

இன்று கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

துலாம்

இன்று கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாரகள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்து நிறுத்திய விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

விருச்சிகம்

இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்

இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்

இன்று தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

2026 இறுதிக்குள் டோல் பிளாசாக்கள் அகற்றம்.. நிற்காமல் 80 கிமீ வேகத்தில் செல்லலாம் – நிதின் கட்கரி அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. விஜய்க்கு வெளியிலிருந்து ஆதரவு தர தயாராகிறதா திமுக?

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணி கட்சிகளிடம் மட்டுமே ஆதரவு கேட்டு வருகிறோம்.. பாஜக கூட்டணியிடம் இல்லை – தவெக விளக்கம்

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய திமுக.. ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2026, வெள்ளிக்கிழமை

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா22 மணி நேரங்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

செய்திகள்5 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

வணிகம்5 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

Translate »
Utforsk playa tesorillo i almuñécar. Crazyplay new music video. -.