Connect with us

வணிகம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஓய்வூதியர் சங்கம் மேலும் கோரிக்கை!

Published

on

சென்னை:
தமிழகத்தில் அரசு துறையினர் ஓய்வுபெற்ற பிறகும் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைத்துக் கொண்டே வருகிறது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015ம் ஆண்டின் இறுதியிலிருந்து அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் காரணமாக, படிப்படியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, சமீபத்தில் வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் 1க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 18% மற்றும் அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியத்தில் சுமார் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை அதிகரிப்பு ஏற்படும்.

இது குறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன் தெரிவித்ததாவது:
“2016 செப்டம்பர் 1க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 36% மற்றும் அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 16% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் முழுமையான உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும், அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 2010க்குப் பிறகு 4 ஊதிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டும், அதற்கான தொகையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலைமையில், ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் அடிப்படை ஓய்வூதியம் குறைந்தது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டால், அதன்படி அகவிலைப்படியும் உயரும். ஓய்வூதியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு விரைந்து தீர்க்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.