சினிமா செய்திகள்
எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!

சமீபத்தில் அமலி என்ற பெண்ணை மறுமணம் செய்த டி இமான் அமலியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இதற்கு அவரது முன்னாள் மனைவி மோனிகா, இரண்டு நாய்க் குட்டிகளை வாங்கி தானும் இரண்டு புதிய மகள்களை ஏற்றுக்கொள்வதாக பதிலடி கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இமான் தனது மனைவி மோனிகா ரிசார்ட் என்பவரை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இதனை அடுத்து பெற்றோர்கள் ஏற்பாடு செய்த அமலி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அமலிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அந்த குழந்தையையும் தனது குழந்தை போல் நினைத்து கொள்வதாக டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோனிகா தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு நாய்க் குட்டிகளை தான் வாங்கி இருப்பதாகவும் அந்த நாய்க்குட்டிகளையும் தனது இரண்டு மகள்கள் போல் நினைத்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையதளங்களில் ஆகி வருகிறது.
The Richards – Monicka, Veronica, Blesssica, Lia & Mia pic.twitter.com/2aJzbWexLB
— Monicka Richard (@MonickaRichard) May 20, 2022