இந்தியா
சென்னையில் சிலிண்டர் விலை திடீர் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூபாய் 268.50 உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 2,406 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆனால் அதே நேரத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 965. 50 என தொடர்கிறது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வணிகத்திற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.




















