தமிழ்நாடு
விஜயகாந்த் குணமாக வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நீரிழிவு நோய் காரணமாக காலிலுள்ள விரல்கள் அகற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் குணமடைந்து நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது:
எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் மீண்டும் கம்பீரமாக எழுந்து வர வேண்டும் என்று தெரிவித்து கூறியிருப்பதாவது:
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.