வணிகம்
இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் சீனா!

இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத் தொடங்கின.
உடனே சுதாரித்திக்கொண்ட இந்தியா, கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனப் பங்குகளை வாங்கி ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது.
அதனால், வெளிநாட்டினர்கள் இந்தியப் பங்குச்சந்தை அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தது. பின்னர், இந்திய அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குகளை வாங்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதித்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, சீனாவின் இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்தியா இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.


















