Connect with us

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்!

Published

on

ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்!

சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் அரசு நிலத்தில் கடந்த 63 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழும் மக்கள் ஆக்கிரமித்து குடியிருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி அவர்களை காலி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வீடுகளை இடிக்கும் போது பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினார் .

இந்த நிலை தனது வீட்டை வீடு இடிக்கப்படுவதை அறிந்த கன்னையா என்ற 60 வயது முதியவர் தற்கொலைக்கு முயன்றார். தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் காப்பாற்றி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?