சினிமா செய்திகள்
சென்னை காசி தியேட்டர் உரிமையாளர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகினர்

சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான காசி தியேட்டரில் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று காசி தியேட்டர் என்பதும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படங்களில் நடித்த நட்சத்திரங்கள் இந்த திரையரங்குக்கு வந்து ரசிகர்களை நேரில் சந்திப்பதை பலமுறை பார்த்து இருக்கிறோம்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் உள்ள முக்கிய இடத்தில் இந்த தியேட்டர் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெருமளவில் இந்த படம் தியேட்டருக்கு வந்து படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த நிலையில் காசி தியேட்டர் உரிமையாளர் பழனியப்பன் அவர்கள் இன்று திடீரென காலமானார். அவரது மறைவு சினிமா உலகினர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல் தங்களது விருப்பத்துக்குரிய நடிகரின் திரைப்படங்கள் வெளியாகும் போது கட்-அவுட் பாலாபிஷேகம் செய்து மேளதாளங்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவதை காசி தியேட்டர் உரிமையாளர் அனுமதி தந்தார் என்பதும் அதனால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இந்த தியேட்டரில் தான் ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
















