தமிழ்நாடு
உலகின் அதிக சிசிடிவி கேமிராக்கள் கொண்ட நகரம்… சென்னைக்கு முதலிடம்!

உலக அளவிலேயே அதிக சிசிடிவி கேமிராக்கள் நிறைந்த நகரம் என சென்னை நகரம் பெயர் எடுத்துள்ளது.
உலக அளவிலான இந்த ரேங்கிங் பட்டியலில் சென்னை நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னைப் பொறுத்த வரையில் அதிக சிசிடிவி கேமிராக்களைப் பொறுத்த சென்னை மாநகர காவல் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
அந்த வகையில் சென்னை நகரில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாம். உலகிலேயே இது தான் அதிகம். இரண்டாம் இடத்தையும் இந்த சர்வதேசப் பட்டியலில் இந்திய நகரமே பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 சிசிடிவி கேமிராக்கள் என ஹைதராபாத் நகரம் உள்ளது. 289 கேமிராக்கள் உடன் தலைநகர் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
முதல் 10 இடங்களில் டாப் 3 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அடுத்ததாக டாப் 10 பட்டியலில் 6 இடங்களை சீன நகரங்கள் பிடித்துள்ளன.











