Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன், சம்பள உயர்வு மற்றும் விடுமுறை அடிப்படையில் பல நன்மைகள் எதிர்பார்ப்பு!

Published

on

8வது ஊதியக்குழு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன், சம்பள உயர்வு மற்றும் விடுமுறை அடிப்படையில் பல நன்மைகள் எதிர்பார்ப்பு!

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு நியமனம் மைய அரசால் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஊதிய அமைப்பின் கீழ் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை வீட்டு கடன் 7.44% வட்டியளவில் வழங்கப்படுகிறது. ஆனால், 8வது ஊதியக்குழு அமலுக்குவந்த பிறகு வீட்டு கடன் உள்பட பல நன்மைகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு கடன் வரம்பு 30 லட்சத்திற்கு மேல் உயரக்கூடும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. வட்டி சதவிகிதம் மாற்றமின்றி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 வீட்டு கடன் உயர்வு:

  • தற்போதைய வரம்பு: ₹25 லட்சம்

  • எதிர்பார்க்கப்படும் புதிய வரம்பு: ₹30 லட்சம் மேல்

  • வட்டி: 7.44% (மாறாமல் இருக்கலாம்)

  • ஆலோசனைகள் தற்போது நடந்து வருகின்றன

 சம்பள உயர்வு:

8வது ஊதியக்குழு அமல்பட்டவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்படவுள்ளது. சம்பள உயர்வின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 விடுமுறை அதிகரிப்பு:

7வது ஊதியக்குழு வரை வழங்கப்பட்ட விடுமுறைகள்:

  • ஈட்டிய விடுப்பு (Earned Leave): 30 நாட்கள்

  • பாதி சம்பள விடுப்பு (Half Pay Leave): 20 நாட்கள்

  • தற்செயல் விடுப்பு (Casual Leave): 8 நாட்கள்

  • தேசிய மற்றும் மாநில விடுமுறைகள்: 19 நாட்கள்

8வது ஊதியக்குழுவில் அதிகரிக்கலாம் எனப்படும் விடுமுறை விவரங்கள்:

  • ஈட்டிய விடுப்பு: 35 நாட்கள்

  • பாதி சம்பள விடுப்பு: 25 நாட்கள்

  • தற்செயல் விடுப்பு: 10 நாட்கள்

இவை அனைத்தும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் மாற்றப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற கொள்கைகளை ஏற்கவே, அரசு அதனை பின்பற்ற திட்டமிட்டுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Strong contextual links.