சினிமா செய்திகள்
எனக்கு அவரை தவிர யாருமே இல்லை: விவேக் மேனேஜரின் உருக்கமான பதிவு

எனக்கு விவேக் அவர்களை தவிர வேறு யாருமே இல்லை என உருக்கமாக டுவிட்டரில் அவருடைய மேனேஜர் செல் முருகன் பதிவு செய்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விவேக்கின் மேனேஜரும் விவேக்குடன் பல திரைப் படங்களில் நடித்தவருமான செல் முருகனுக்கு விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தில் ஒருவராக இருந்த செல் முருகன் தற்போது விவேக்கின் மறைவு குறித்து தனது டுவிட்டரில் உருக்கமாக ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஓர் மரணம் என்ன செய்யும்
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்
ஆனால் அண்ணா…
உண்மையான ஜீவன்
என் உயிர் தோழன்
என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண
காற்றில் கரைந்து விட்டாயே!
இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!
இனி என் முருகனுக்கு யார்? துணை
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?
இனி அவனுக்கு
யார்? துணை..
யார்? துணை….
யார்? துணை……
இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல pic.twitter.com/rvnXRLXxsw
— cellmurugan (@cellmurugan) April 18, 2021





















