செய்திகள்
விஸ்வரூபம்-2விற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா வழக்கு.. பரபரப்பு காரணம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுக்க பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் வெளியாகவில்லை. முதல் பாகம் வெளியாகி 5 வருடம் ஆகியுள்ளது.
பல பணிகளுக்கு இடையில் தற்போது படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 10 தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

விஸ்வரூபம்-2விற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா வழக்கு
மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை வைத்து மர்மயோகி படம் எடுக்காமல் கமல், உன்னைப்போல் ஒருவன் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் வாங்கிய பணத்தை கமல்ஹாசன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் தற்போது அந்த நிறுவனத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

















