பல்சுவை
கொழுப்பால் உடல் எடையைக் குறைப்பது எப்படி? பேலியோ டயட் பற்றித் தெரியுமா?

பொதுவாக உடல் எடை குறையக் கொழுப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ சொல்வதைத்தான் நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால் இந்தப் பேலியோ டயட் சாப்பிடுபவர்கள் நேரடியாகக் கொழுப்பை உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக உள்ளதல்லவா? முல்லை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
அது போலத் தான் பேலியோ டயட்டும். உடல் எடை மட்டுமல்ல, தோற்றம் பொலிவடைந்து வயதும் குறைந்து போகும் என்றால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா?
கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான் பேலியோ டயட். முந்திரிப் பருப்பை நெய்யில் வருத்துச் சாப்பிடுங்கள்.கொழுப்பை மட்டும் வாங்கி வந்து பிரை பண்ணி சாப்பிடுங்கள். என்றால் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறதா இல்லையா?
உண்மையில் இது புதிய முறையல்ல.பழைய காலங்களில் சாப்பிட்டதைப்போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து நல்ல கொழுப்புள்ள இறைச்சி, மீன்கள், முட்டை, விதைகள், கொட்டைகள் ஆகியவற்றை உண்பதே பேலியோ டயட்.
காலையில் காய்கறி பொரியல், பகலில் பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் ஆப் பாயில், பன்னீர் மறுபடியும் பொரியல் இதுதான் பேலியோ டயட்.
இது எடைக்குறைப்புக்கான பிரத்யேக டயட் அல்ல.இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும்.தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் வலுவடையும்.
இந்த உணவு முறைதான் இப்போது உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. பரீட்சித்துத்தான் பாருங்களேன்!










