இந்தியா
ரூ.295ல் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டானியா நிறுவனம்.. இன்று ஒரு டிரில்லியன் மதிப்பு.. வளர்ந்த கதை!

வெறும் ரூ.295 முதலீட்டில் ஆரம்பித்த பிரிட்டானியா நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதாவது ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.
கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1892 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூ.295 முதலீடு மட்டுமே வைத்து பிரிட்டானியா நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1892 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மட்டுமே வைத்து, பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் குழுவொன்று பிரிட்டானிய நிறுவனத்தை உருவாக்கியது. இப்போது, 130 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆரம்பத்தில், மத்திய கொல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் பிஸ்கட் தயாரிக்கப்பட்டது. பின்னர், இந்த நிறுவனம் V.S. பிரதர்ஸ்” என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1918ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ஹோம்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபர் பங்குதாரராக எடுத்துக் கொள்ளப்பட்டு, தி பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட் (பிபிசிஓ) என தொடங்கப்பட்டது. மும்பை தொழிற்சாலை 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பிஸ்கட்டுகளுக்கு அதிக தேவை இருந்ததால், இது பிரித்தானியா பிஸ்கெட் விற்பனை அதிகமாகியது. ஏனெனில் அது பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பிஸ்கட்களை வழங்கியது. பின்னர், நிறுவனத்தின் பெயர் 1979 இல் தற்போதைய “பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” என மாற்றப்பட்டது.
1982 ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனமான Nabisco Brands, Inc. பீக் ஃப்ரீன்ஸின் தாய் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அதன்பின்னர் 1997ஆம் ஆண்டில் பிரிட்டானியாவின் பால் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்கப்பட்டது. வழிவகுத்தது. மேலும் நாடு முழுவதும் பல உற்பத்தி ஆலைகளைத் தொடங்கப்பட்டது. பிரிட்டானியாவின் பிஸ்கட்களின் பிற பிராண்ட் பெயர்களில் 50-50, நியூட்ரிச்சாய்ஸ், குட் டே, பியூர் மேஜிக் மற்றும் மில்க் பிகிஸ், போர்பன், நைஸ் டைம் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
தற்போது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ்நீத் கோஹ்லியும், நிர்வாக துணைத் தலைவர் & MD ஆக வருண் பெர்ரியும் தலைமை வகிக்கின்றனர். நவம்பர் 2022 ஆம் ஆண்டு வலுவான காலாண்டு முடிவுகளின் காரணமாக பங்கு விலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டன. இந்த உயர்வு காரணமாக பிரிட்டானியா இன்று ரூ. 1 டிரில்லியன் மதிப்புள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. பிரிட்டானியாவின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.06 டிரில்லியன் ஆகும்.