இந்தியா
தாலி கட்டியதும் குலுங்கி குலுங்கி அழுத மணமகள்.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. வைரல் வீடியோ

இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரு மனம் இணைவது, இரு குடும்பங்கள் இணைவது மட்டுமின்றி ஒரு உணர்ச்சிபூர்வமான திருவிழாவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மணமகள் தன்னுடைய பிறந்த வீட்டு விட்டு பிரிந்து செல்லும்போது கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் கிட்டத்தட்ட அனைத்து திருமணங்களிலும் நடக்கும் என்பது தெரிந்தது.
மணமகன் வீட்டுக்கு செல்லும் மணமகள் அவ்வப்போது தனது தாய் வீட்டுக்கு வந்து போகக்கூடிய நிலை இருந்தாலும் முதன்முதலாக தனது தாய் வீட்டை விட்டு பிரிந்து செல்லும் மணமகளுக்கு ஏற்படும் துயரம் என்பது சொல்லி மாளாது.
எனவே தாலி கட்டி முடிந்தவுடன் நாம் இன்னொரு குடும்பத்திற்கு சொந்தம் என்ற எண்ணம் மணமகளுக்கு ஏற்படும் என்பதும் அதுதான்மணமகளின் கண்களில் உள்ள கண்ணீருக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணம் ஆன புதுமணப்பெண் ஒருவர் தாலி கட்டி முடித்துவுடன் குலுங்கி குலுங்கி அழுததற்கு ஒரு வித்தியாசமான காரணம் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது. இதுகுறித்த வீடியோவில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டியதும் மணமகள் தனது குடும்பத்தினரிடம் விடை பெறுவதற்காக கண்ணீருடன் காத்திருந்தார். அப்போது மணமகள் வளர்த்த செல்ல நாய்க்குட்டி ஒன்று அவர் அருகே நிற்கிறது.
அந்த நாய்க்குட்டியை தடவி தடவி கொடுத்த மணமகள் நாயையும் பிரிந்து செல்ல வேண்டி இருக்கிறது என்ற எண்ணத்தில் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த உணர்ச்சிபூர்வமான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் பலர் இது ஒரு உணர்ச்சிகரமான வீடியோ என்றும் பாசப்பிணைப்பு, பிரிவு என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உள்ளது என்றும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CnEzXJQpdJz/