இந்தியா
பிப்ரவரி 14 காதலர் தினம் என்பது தெரியும்.. முத்த தினம் எப்போது தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் என்பதும் அன்றைய தினத்தில் உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் பாசத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே.
ஜாதி, மதம், இனம் என எந்த வேறுபாடும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து மனித இனங்களும் கொண்டாடும் ஒரே நாள் காதலர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதலர் தினத்தை கடந்து சில வருடங்களாக பிப்ரவரி 14-ம் தேதி மட்டும் இன்றி அந்த வாரம் முழுவதுமே காதலர் வாரமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
அதில் ஒரு திடம்தான் முத்த தினம், அதாவது காதலர் தினத்துக்கு முந்தைய நாள் பிப்ரவரி 13ஆம் தேதி முத்த தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முத்த தினத்தில் காதலர்கள், தம்பதிகள் ஒருவருக்கொருவர் முத்தத்தை பரிமாறி கொள்ள தவறக்கூடாது என்றுதான் தற்போது முத்த தினம் ஞாபகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏராளமான வார்த்தைகளை மூலம் காதலை அழகாக வெளிப்படுத்துவதை விட மிகச் சிறந்தது ஒரே ஒரு முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்துவது என்பதுதான் காதலர்கள் எண்ணமாக உள்ளது. எனவே இந்த தனித்துவமான நாளை கொண்டாட வேண்டும் என்பது மட்டுமின்றி இதில் அவசரப்படாமல் உங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்து முத்தமிட்டால் மிகுந்த இன்பம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் உங்களுடைய துணையும் ஒருவருக்கு ஒருவர் அறிந்தவராக இருந்தால் இந்த முத்த தினம் உங்களுக்கு பாசத்தை வெளிப்படுத்த சரியான தினமாக இருக்கும். இந்த நிலையில் காதலர் தின வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் என்னென்ன தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்ப்போம்.
நாள் 1 ரோஜா தினம் பிப்ரவரி 7
நாள் 2 புரபோஸ் தினம் பிப்ரவரி 8
நாள் 3 சாக்லேட் தினம் பிப்ரவரி 9
நாள் 4 டெடி தினம் பிப்ரவரி 10
நாள் 5 வாக்குறுதி தினம் பிப்ரவரி 11
நாள் 6 கட்டிப்பிடி தினம் பிப்ரவரி 12
நாள் 7 முத்த தினம் பிப்ரவரி 13
நாள் 8 காதலர் தினம் பிப்ரவரி 14
முத்தத்திலும் பல்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக முத்தத்தை காதல் குறித்து ஆய்வு செய்தவர்கள் 7 வகையாக பிரித்துள்ளனர். அந்த முத்த வகைகள் என்னென்ன தெரியுமா?
1. கை முத்தம்
2. கன்னத்தில் முத்தம்
3. கழுத்து முத்தம்
4. மூக்கு முத்தம்
5. பிரஞ்சு முத்தம்
6. நெற்றியில் முத்தம்
7. காது மடல் முத்தம்