இந்தியா
சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட வாலிபர்… அதிர்ச்சி பின்னணி….

சமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் அமர்கண்டக் என்கிற பகுதியில் பந்தா என்கிற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார்.
இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று 2 சமோசா வாங்கியுள்ளார். அப்போது ரூ.20 தரும்படி கடைக்காரர் கேட்டுள்ளார். 2 சமோசா ரூ.15க்கு விற்பனை செய்து விட்டு திடீரென ஏன் 5 ரூபாய் ஏற்றினீர்கள் என அவர் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்தார். எனவே, அவருக்கும், கடைக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது. எனவே, அந்த வாலிபர் மீது அருகிலிருந்த காவல் நிலையத்தில் கடைக்காரர் புகாரளித்தார். எனவே, போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தி அவரை எச்சரித்தனர்.
அடுத்த நாள் அந்த வாலிபர் அந்த கடைக்கு சென்று மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளர். மேலும், அங்கிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எனவே, அவரது உடல் பற்றி எரிந்தது. எனவே,அவரை மருத்துவனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.














