Connect with us

இந்தியா

சற்றுமுன் இனி ‘பிறப்புச் சான்றிதழ்’ கட்டாயம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு!

Published

on

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது எப்படி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமோ, அதே போன்று அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறவும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் ஆக்கும் திருத்த மசோதவை குளிர் கால கூட்டத்தின் போது மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குழந்தைகளைக் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது, வாக்காளர் அடையாள அட்டை வாங்குவது, மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அரசு ஆவணங்களைப் பெற பிறப்புச் சான்றிதழைக் கட்டாயமாக ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழை எல்லா ஆவணங்களையும் பெற பயன்படுத்துவதன் மூலம், அனைத்து தரவுகளும் மையமாக சேமிக்கப்பட்டு, 18 வயதை அடைந்தவுடன் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் என்றால் என்ன? ஏன் பதிவு செய்ய வேண்டும்?

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் குடியுரிமைக்கான சட்டப்பூர்வமான அத்தாட்சியாகும். பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டம் 1969-ம் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் அதற்கான விவரங்களைப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். மேலும் முழுமையாகப் பெயருடன் பெறப்படும் பிறப்புச் சான்றிதழ்தான் சட்டப்பூர்வமானது.

ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

சென்னை மருத்துவமனைகளில் பிறந்தவர்களின் பிறப்புச் சான்றிதழை https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணைப்பிற்குச் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பிறந்தவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Home.aspx என்ற இணைப்பிற்குச் சென்று பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் போது பிறந்த மாவட்டம், மருத்துவமனை, பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் இலவசமாகப் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?