டிவி
Bigg Boss 4 – ‘அடுத்த ஜீரோ நீதான்!’- கேபிக்கு பாலாவின் நேரடி சவால்
Published
2 years agoon
By
Barath
இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் நிறைவடைய உள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்து வருகிறது.
இந்த வாரம் யார் எவிக்ஷன் ஆகப் போகிறார் என்கிற பதற்றம் ஒரு பக்கம் இருக்க, தினம் தினம் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இன்று, ‘தங்கப் பந்து பிடிக்கும் போட்டி’.
பங்கேற்பாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அழைக்கப்பட, வீட்டின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பைப்பில் இருந்து தங்க நிறத்திலான பந்து வந்து விழுகிறது. அதை பங்கேற்பாளர்கள் வந்து கேட்ச் பிடிக்க வேண்டும். அப்படி பந்தை சரியாக கேட்ச் பிடிப்பவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.
இப்படி பந்தைப் பிடித்த ஒவ்வொருவரும் தங்களுக்கான சலுகைகளை மற்றவர்கள் மீது பயன்படுத்துகின்றனர். இதில் கேபி, பாலாவுக்கு எதிராக செயல்பட்டு விடுகிறார். இதனால் கேபியை அச்சுறுத்துவது போல பாலா சவால் விடுகிறார். இதனால் இன்றைய பிக் பாஸ் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டீசர் வீடியோ:
You may like
-
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?
-
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் ரச்சிதாவின் சம்பளம் இவ்வளவா?
-
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?