வணிகம்
ஜூன் 1 முதல் மாற்றங்கள்: LPG விலை, EPFO 3.0, ATM, கிரெடிட் கார்டு விதிகள் – உங்கள் பண திட்டமிடலை உடைக்கும் புதிய விதிகள்!

ஜூன் 1, 2025 முதல் உங்கள் வாழ்வில் பல முக்கிய நிதி விதிமாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இவை உங்கள் மாத வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்பு திட்டங்களை நேரடியாக பாதிக்கும். இதோ, அந்த முக்கியமான மாற்றங்கள்:
🔸 LPG சிலிண்டர் விலை மாற்றம்: ஒவ்வொரு மாதமும் போலவே, ஜூன் 1ஆம் தேதி வீட்டு மற்றும் வணிக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். விலை குறையவோ, உயராகவோ வாய்ப்பு உள்ளது.
🔸 EPFO 3.0 அறிமுகம்: ஊதியத்தொகை பங்களிப்பு அமைப்பான EPFO, தனது புதிய பதிப்பு EPFO 3.0-ஐ ஜூன் 1 அன்று தொடக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் PF பணம் ATM கார்டு மூலம் நேரடியாக எடுக்கக்கூடியதாகும்.
🔸 ATM பணம் எடுக்கும் கட்டணம் அதிகரிப்பு: இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் அதிகரிக்கலாம். இது வழக்கமான ATM பயனாளர்களுக்கு கடுமையான தாக்கம் ஏற்படுத்தும்.
🔸 கிரெடிட் கார்டு விதிகள் கடுமையாகும்: ஆட்டோ டெபிட் தோல்வியால் 2% அபராதம் விதிக்கப்படும். எரிபொருள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் பல சேவைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வரும்.
🔸 8வது ஊதியக்குழு நியமனம்: ஜூன் மாதம் ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்ற பரிந்துரைகளை ஆய்வு செய்யும் குழு நியமிக்கப்படும்.
🔸 ஆதார் இலவச புதுப்பிப்பு முடிவு: ஜூன் 14ஆம் தேதி இலவச ஆன்லைன் ஆதார் புதுப்பிப்பு வசதி முடிவடைகிறது. பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
🔸 GST இன்வாய்ஸ் எண்களில் மாற்றம்: இனி case-sensitive இல்லாமல் abc, ABC, Abc ஆகியவை ஒரே மாதிரியாக கருதப்படும். இன்வாய்ஸ் எண்கள் தானாகவே uppercase-ஆக மாறும்.
🔸 ரிசர்வ் வங்கி கொள்கை மாற்றம்: ஜூன் 6 அன்று நடைபெறும் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் FD வட்டி விகிதமும் குறையலாம்.
இந்த விதிமாற்றங்கள் உங்கள் பண மேலாண்மையை நேரடியாக பாதிக்கும். எனவே, இதைப் புரிந்து கொண்டு முன்னேற்பாடு செய்யும் பாணியில் செயல்பட வேண்டும்.
