சினிமா செய்திகள்
ஓடிடியில் ‘பாகுபலி 3’: எஸ்.எஸ்.ராஜமெளலியின் மெகா திட்டம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்தது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தை எஸ்எஸ் ராஜமௌலி விரைவில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளிவந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் எஸ்எஸ் ராஜமெளலி தயாரிப்பில் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாகவும் 9 எபிசோடு கொண்ட இந்த தொடரை எஸ்எஸ் ராஜமெளலியின் உதவி இயக்குநர் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுமார் 200 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராக இருப்பதாகவும், ஒன்பது எபிசோட்களாக தயாராக இருக்கும் இந்த தொடரின் பணிகள் மிகவும் மிக விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும், இந்த தொடர் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
BREAKING: Netflix scraps its initial version of #Baahubali, and will restart shoot with a new scale and size of 200 crores. The 9-episode series produced by SS Rajamouli is believed to be India's answer to Game of Thrones. pic.twitter.com/ZnrIlO6i0H
— LetsCinema (@letscinema) March 16, 2021



















