Connect with us

சினிமா செய்திகள்

8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிப்பு – விஜய்சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா உள்ளிட்ட 201 பேருக்கு விருது அறிவிப்பு

Published

on

2011ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் என தேர்தல் நேரத்தில் அரசு முடிவு செய்து நேற்று 8 ஆண்டுகளுக்கான மொத்த விருது பட்டியலையும் அறிவித்துள்ளது.

இதில், 2017ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர்கள் கார்த்தி, சூரி, சந்தானம், பிரியாமணி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, நடன இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட 201 திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், குறித்த விவரங்கள் இதோ,

2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டியராஜன், டி.பி. கஜேந்திரன், நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி, நாட்டுபுறப் பாடகி பரவை முனியம்மா, திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2014ம் ஆண்டுக்காக, நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது,

2015ம் ஆண்டுக்காக, திரைப்பட இயக்குநர் ஏ.என். பவித்ரன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, பின்னணிப் பாடகர் கானா பாலா, நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுடன், பல்வேறு கலைத்துறை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டுக்காக, நடிகர்கள் சசி குமார், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, நாட்டுப்புறப்பாடகர் கலாராணி உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்காக, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, இசையமைப்பாளர் யுவச் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கலைஞானம், புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி உள்ளிட்ட 28 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்காக, நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பின்னணிப் பாடகர் உன்னி மேனன் உள்ளிட்ட, பலதுறை சார்ந்த 34 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்பிரிவில் எஸ், ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்தி மாலா பாலி, வி.பி. தனஞ்செயன், சி.வி. சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் கலை வித்தகர்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கு சான்றிதழுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்4 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்8 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்8 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.