சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ படத்தின் மருதாணி பாடல்: ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் அசத்தல்!
Published
1 year agoon
By
Shiva
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் மருதாணி பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற மருதாணி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்த பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
மருதாணி செவப்பு செவப்பு
மணமேடை நினைப்பு நினைப்பு
என்ற இந்த பாடல் ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை அமுதவன் என்பவர் எழுதி இருக்க நாகேஷ் அந்தோணிதாசன் வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடலில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகிய ஆகியோர்கள் இடம்பெறும் காட்சிகள் உள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
முரட்டுக்காளை ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்
-
ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
-
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!
-
விஜய் மட்டுமில்லை எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான்; அந்தர் பல்டி அடித்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ