தமிழ்நாடு
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு 72 மணி நேரம் கெடு கொடுத்த அண்ணாமலை!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை தமிழக அரசு 72 மணிநேரத்திற்குள் குறைக்க வேண்டும் என அண்ணாமலை கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறைத்துள்ளது.
ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறியதை கூட திமுக அரசு செய்யாமல் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காமல் உள்ளது. இன்னும் 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையை ஐந்து ரூபாய் குறைக்க வேண்டும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்க வேண்டும், இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.