சினிமா செய்திகள்
Love Today in Hindi: இந்தியில் ரீமேகாகும் லவ் டு டே…!

நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் ‘லவ் டுடே’. மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடித்திருந்தனர்.
காதலர் இருவரும் செல் போன்களை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்வதால் ஏற்படும் சிக்கலும் பிரச்சனையும் தான் படத்தின் திரைக்கதை. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் மத்தியில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. தமிழில் இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, லவ் டுடே படம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தெலுங்கில் வெளியிடப்பட்டது.
Super happy to announce the Hindi Remake of #LoveToday in association with Phantom Films @FuhSePhantom @shrishtiarya Can’t wait to take this film to a larger audience with a super interesting cast and crew ❤️ @pradeeponelife @Ags_production @aishkalpathi
— Archana Kalpathi (@archanakalpathi) February 20, 2023
இந்நிலையில் தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உரிமையை ஃபாண்டம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர், லவ் டுடே ரீமேக் மூலம் ஹிந்தி சந்தையில் நுழைய ஆவலாக உள்ளதாக தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் 100வது நாளை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. இப்படம் 9 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு தற்போது 100 வது நாளான இன்றுடன் 80 கோடியை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ,இந்த வெற்றிக் கூட்டணி அடுத்த திட்டத்தில் மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.