சினிமா செய்திகள்
ரஜினியை ஓஷோவுடன் ஒப்பிட்ட அல்ஃபோன்ஸ் புத்திரன்!

நடிகர் ரஜினிகாந்த்தை ஓஷோவுடன் ஒப்பிட்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் பேசியுள்ளார்.
’நேரம்’, ‘பிரேமம்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். கடைசியாக அவரது ‘கோல்டு’ திரைப்படம் வெளியானது.
தமிழ் சினிமாவை கவனித்தும் இங்குள்ள நட்சத்திரங்கள் குறித்தும் அவர்களது படங்கள் பற்றியும் தொடர்ச்சியாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருவார் அல்ஃபோன்ஸ். அந்த வகையில், அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சை காணொளியில் கேட்டுவிட்டு அவர் கூறியிருப்பதாவது, ‘நடிகர் ரஜினிகாந்த் தத்துவ ஞானி ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார் என்பது என் கருத்து. அவரது பேச்சுகளைக் கேட்கும்போது எனக்கு புல்லரிக்கிறது.
யாரோ ஒரு சிலர் பேசும்போது மட்டுமே இதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்படும். ரஜினிகாந்த் எதாவது நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற பேச்சுகளை கேட்க முடிகிறது. அவர் தொடர்ந்து இதுபோன்று இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதில் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அவரது பேச்சைக் கேட்பதற்கு காத்திருக்கும் என்னைப் போன்ற பல லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்’ எனக்கூறியுள்ளார்.