சினிமா
பவர் ஸ்டார் உடன் ஓவர் ரொமான்ஸ்; ரசிகர்களை ஷாக் ஆக்கிய பிக் பாஸ் பிரபலம்!

பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல்நலம் தேறி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், அவருடன் படு நெருக்கமாக பிக் பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

#image_title
நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், புதிதாக பவர் ஸ்டார் சிக்கி விட்டாரா என நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் நடிகை வனிதா விஜயகுமார் பிக்கப் டிராப் எனும் படத்தில் கமீட் ஆகி இருந்தார். அந்த படத்தின் போஸ்டரில் பவர்ஸ்டார் சீனிவாசன் உடன் திருமணம் செய்து கொண்டது போல வனிதா நடித்திருந்த நிலையில், அப்போதே இருவருக்கும் திருமணமா? என கேள்விகள் கிளம்பின.

#image_title
இந்நிலையில், தற்போது பவர்ஸ்டார் சீனிவாசன் உடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ள நிலையில், மீண்டும் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளதா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினருக்கு மகளாக பிறந்த வனிதா விஜயகுமார் சினிமா மற்றும் சின்னத்திரை என சமீப காலமாக கலக்கி வருகிறார்.
ஏகப்பட்ட படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் வனிதா விஜயகுமார், ஹரி நாடார், பவர் ஸ்டார் போன்றவர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.