ஆன்மீகம்
அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருட்களை வாங்கினால் செல்வச் செழிப்பு உண்டாகும்!

அட்சய திருதியை 2025:
செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை வருகிறதாம். ஆனால் திருதியை திதி ஏப்ரல் 29ஆம் தேதி காலை 5:31 மணிக்கு துவங்கி ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 2:12 மணிக்கு முடிகிறது. திருதியை திதி சூரியோதயத்தில் உள்ளதால் ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை அன்று வாங்கும் எந்த பொருட்களும் பெருகும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் இந்த நாளில் தங்கம் வாங்குவது வழக்கமாகும். ஆனால் தங்கம் வாங்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட பொருட்களை வாங்கி செல்வச் செழிப்பை அதிகரிக்கலாம்:
🔹 வெள்ளி:
தங்கத்திற்கு மாற்றாக வெள்ளி பாத்திரங்கள், நாணயங்கள், நகைகள் அல்லது ஆபரணங்களை வாங்கலாம். வெள்ளியை மற்றவர்களுக்கு பரிசாக வழங்கினாலும் அதிர்ஷ்டம் பெருகும்.
🔹 வாகனங்கள்:
இந்த நாளில் கார்கள் மற்றும் பைக்குகள் போன்ற வாகனங்களை வாங்குவது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கும் வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்.
🔹 தங்கம்:
தங்கம் வாங்குதல் சுதந்திரம், செழிப்பு மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதாக கருதப்படுகிறது.
🔹 சொத்துகள்:
நிலம், வீடு மற்றும் பிற சொத்துகளில் முதலீடு செய்யும் சிறந்த நாள். வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்கள் இதனை நன்மை தரும் முகூர்த்தமாக கருதுகிறார்கள்.
🔹 மரச்சாமான்கள்:
வீட்டிற்கு தேவையான சோபா செட், டைனிங் டேபிள் போன்ற புதிய மரச்சாமான்களை வாங்குவதும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
🔹 மின்னணு சாதனங்கள்:
ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், தொலைக்காட்சி போன்ற புதிய மின்னணு சாதனங்களை வாங்குவதும் வளம் பெருக காரணமாகும்.
🔹 பங்குகள் மற்றும் முதலீடுகள்:
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் பணம் செலுத்துவது, நீண்ட கால வருமானத்தையும் நன்மையையும் வழங்கும்.















